நடிகை ராசி கண்ணா தெலுங்கு சினிமா மட்டுமின்றி தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.
ராசி கண்ணா தற்போது பவன் கல்யாண் உடன் பகத் சிங் படத்தில் நடித்து வருகிறார். மேலும் Telusu Kada என்ற படத்திலும் ஹீரோயினாக அவர் நடித்து வருகிறார்.

மூத்த ஹீரோவுடன் நடிக்க மறுப்பு
இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் ஒரு மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்க ராசி கண்ணாவுக்கு பட வாய்ப்பு வந்திருக்கிறது.
ஆனால் மூத்த நடிகரை காதல் செய்வது போன்ற ரோலில் நடிக்க முடியாது என அவர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த மூத்த நடிகர் யார் என்பது தான் டோலிவுட் வட்டாரத்தில் பெரிய கேள்வியாகி இருக்கிறது.

