ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தொழிலாளர்
தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், மாகாண சபைத் தேர்தலில்
களமிறங்குவதற்குத் திட்டமிட்டுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து
அறியமுடிகின்றது.
பதவி விலக..
தேர்தல் அறிவிப்பு வெளியான பின்பு அவர் எம்.பி. பதவியில் இருந்து விலகவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

மாகாண சபைத் தேர்தலில் மக்கள் ஆணையை பெறும் நோக்கிலேயே அவர் இந்த முடிவை
எடுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
கட்சி பிரமுகர்களுடன் இது சம்பந்தமாக அவர் ஆலோசனை நடத்தி வருகின்றார் எனவும்,
விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

