முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டை உலுக்கிய தினேஷ் ஷாஃப்டரின் கொலை : சிஐடி வெளியிட்ட தகவல்

தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் (Dinesh Schaffter) மரணம் தொடர்பிலான விசாரணைகள் மீளவும் ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) உயர் அதிகாரி ஒருவர் தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த கொலை குற்றம் தொடர்பாக விசாரிக்கப்பட்ட அனைத்து தொடர்புடைய அறிக்கைகளும் உடனடியாக மீண்டும் விசாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினேஷ் ஷாஃப்டரின் மரணம்

பொரளை கல்லறையில் மர்மமான முறையில் இறந்த நிலையில் கிடந்த தினேஷ் ஷாஃப்டரின் மரணம் குறித்த காவல்துறை விசாரணை தொடங்கும் என்று அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை உலுக்கிய தினேஷ் ஷாஃப்டரின் கொலை : சிஐடி வெளியிட்ட தகவல் | Dinesh Shafter Murder Case

மேலும், இது தொடர்பான அறிக்கைகளை விசாரிக்க இரகசிய காவல்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு நியமிக்கப்படவுள்ளதாகவும் குற்றம் விரைவில் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படும் எனவும் குறித்த அதிகாரி வழங்கிய செவ்வியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொழிலளதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் கழுத்து மற்றும் முகத்தில் அழுத்தப்பட்டதன் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 2023 நவம்பர் 01ஆம் திகதி தீர்ப்பளித்தது.

இந்தச் சம்பவத்தின் மூலம் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாகத் தீர்ப்பளித்த நீதவான், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்