விவசாயிகளையும், அரசு ஊழியர்களையும் முன்னணியில் வைத்து ஆட்சியைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், விவசாயிகளையும், அரசு ஊழியர்களையும் மறந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(sajith premadasa) தெரிவித்தார்.
விவசாயிகள் உர மானியங்களையோ அல்லது நெல்லுக்கு போதுமான உத்தரவாத விலையையோ பெறவில்லை என்றும், அரசு ஊழியர்கள் வாக்குறுதியளிக்கப்பட்ட சம்பள உயர்வைப் பெறவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
விவசாயிகளுக்கு உயர்தர உள்ளீடுகள் கிடைப்பதில்லை
ஹொரவபொத்தானவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், விவசாயிகளுக்கு உயர்தர உள்ளீடுகள் கிடைப்பதில்லை என்றும், அவர்கள் பெறும் உரம் கூட தரமற்றதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
பயிர் சேதத்திற்கான இழப்பீடு கூட கிடைக்காததால் விவசாயிகள் பல சவால்களை எதிர்கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
வரவிருக்கும் தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டும்
விவசாயிகளிடமும், அரசு ஊழியர்களிடமும் பொய் சொன்னதற்காக தற்போதைய அரசாங்கத்திற்கு பதிலளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், விவசாயிகளை அனாதைகளாக்கிய இந்த அரசாங்கத்திற்கு வரவிருக்கும் தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்