இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான அண்மைக்கால முன்னேற்றங்கள் குறித்து
கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இந்த விளக்கத்தை நேற்று(02) வழங்கியுள்ளார்.
சர்வதேச சமூகம் அங்கீகரிக்க
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு எதிர்வரும் 8ஆம் திகதி
ஆரம்பமாகவுள்ளது.

இந்தநிலையில், நடத்தப்பட்ட இந்த விளக்கக் கூட்டத்தின் போது, மனித உரிமைகள்
தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை சர்வதேச சமூகம்
அங்கீகரிக்க வேண்டும் என்று அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிகழ்வில் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, நீதி மற்றும்
தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம், சட்டமா அதிபர் திணைக்களம், காணாமல் போனோர்
அலுவலகம் போன்றவற்றின் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

