பிரதீப் ரங்கநாதன்
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் வெற்றி இவருக்கு நல்ல இயக்குநர் என்ற பெயரையும், விருதுகளையும் வாங்கி கொடுத்தது.
ஆனால், லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் LIK மற்றும் dragon ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகியுள்ளது.
இதில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் Dragon திரைப்படம் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில், இப்படம் குறித்து சில சுவாரசியமான தகவலை இயக்குநர் பகிர்ந்துள்ளார்.
பிரபல நடிகையின் காலை தொட்டு வணங்கிய நடிகை ஜோதிகா.. வைரலாகும் புகைப்படங்கள்
இயக்குநர் ஓபன்
அதில், “படத்தில் நடித்த அனைவரையும் நான் ஒரே மாதிரிதான் நடத்தினேன். படத்தில் வி.ஜே. சித்து மற்றும் ஹர்ஷத் நடிக்க காரணம் உள்ளது. அவர்களுக்கு இரண்டு லட்சம் பார்வையாளர்கள் இருந்தபோது அவர்களுக்கு நானும் ரசிகராக மாறினேன்.
அவர்கள் இருவரும் கவுண்டமணி – செந்தில் மாதிரி. அவர்களின் திறமை எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தில் பல சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.