அஸ்வத் மாரிமுத்து
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான திரைப்படம் டிராகன். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. லவ் டுடே படத்தை தொடர்ந்து பிரதீப் ஏஜிஎஸ் கூட்டணியில் உருவான இரண்டாவது திரைப்படம் இது.
இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயடு லொகர், மிஸ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும் youtube பிரபலங்களான விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி திரையரங்கை அதிர வைத்திருந்தனர்.
அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த கூலி பட டீசர்.. ரிலீஸ் இந்த தேதியா?
மக்களிடையே சிறந்த வரவேற்பை முதல் நாளில் இருந்தே டிராகன் படம் பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது.
அஸ்வத் மாரிமுத்து கோரிக்கை
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பிரபல தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவிற்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
அதாவது, “ஓ மை கடவுளே’ படத்தை பார்த்து விட்டு நடிகர் மகேஷ் பாபு பாராட்டி ட்வீட் செய்திருந்தார். அதை கண்டு தெலுங்கு ரசிகர்கள் அனைவரும் படத்தை பார்த்து கொண்டாடினார்கள். அது போன்று, இந்த படத்தையும் மகேஷ் பாபு பார்க்க வேண்டும். கண்டிப்பாக அவருக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.