செல்வராகவன்
காதல் கொண்டேன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன்.
அதன் பிறகு, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் மற்றும் இரண்டாம் உலகம் போன்ற பல திரைப்படங்களை இயக்கி பிரபலமானார்.
இவர் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
அதுமட்டுமில்லாமல், அவ்வப்போது வாழ்க்கை குறித்து பல தத்துவங்களை கூறும் வகையில் வீடியோவையும் வெளியிட்டு வருகிறார்.
கடைசியாக தன்னுடைய தம்பி இயக்கத்தில் ராயன் படத்தில் லீட் கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்நிலையில் அடுத்ததாக ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்து சொர்க்கவாசல் படத்தில் நடித்துள்ளார்.
தனுஷ் போன்று சூர்யாவும் அதை செய்கிறாரா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் மாஸ் ட்ரீட்
இந்த படம் இன்னும் சில தினங்களில் வெளிவர உள்ள நிலையில், படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் ஆர்ஜே பாலாஜி மற்றும் செல்வராகவன் கலந்து கொண்டுள்ளனர்.
அப்டேட்
அப்போது செல்வராகவனிடம் புதுப்பேட்டை 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ” புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் கதைகளை வெப் தொடர்களாக உருவாக்க திட்டமிட்டு உள்ளேன்.
வெப் தொடர்களாக எடுத்தால் நேரம் அதிகமாக கிடைக்கும் அதனால் சொல்ல வர கருத்தை படத்தின் மூலம் தெளிவாக கூற முடியும்” என்று தெரிவித்துள்ளார்.