கார்த்திக் சுப்புராஜ்
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் கார்த்திக் சுப்புராஜ். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012 -ம் ஆண்டு வெளியான “பீட்சா” என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக கால் பதித்தார்.
அதன் பின், நடிகர் சித்தார்த் கூட்டணியில் ஜிகர்தண்டா என்ற படத்தை இயக்கினார். இதை தொடர்ந்து சில படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தற்போது, சூர்யாவை வைத்து ரெட்ரோ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
பிரபல பொற்கோவிலில் நடிகை ஆண்ட்ரியா.. அவரே வெளியிட்ட போட்டோஸ்
சமீபத்தில் இந்த படத்தில் இருந்து கண்ணாடிப் பூவே என்ற முதல் பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்து படத்தின் இரண்டாவது சிங்கிள் படக்குழு வெளியிடுவார்களா? அல்லது டிரைலர் வெளியாகுமா என்று ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இத்தனை கோடியா?
இந்நிலையில், 42 வயதாகும் கார்த்திக் சுப்புராஜ் அவரது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
இதன் காரணமாக இவரின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஒரு படத்திற்கு சுமார் ரூ. 5 கோடி முதல் ரூ. 10 கோடி வரை சம்பளம் பெரும் இவருக்கு ரூ. 20 முதல் ரூ. 25 கோடி வரை சொத்து மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.