இயக்குநர் என்.எஸ்.பொன்குமார்
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து, பின் ‘1947 ஆகஸ்ட் 16’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் என்.எஸ்.பொன்குமார்.
கடந்த 2023ம் ஆண்டு கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார் இயக்குநர் பொன்குமார்.
இவர் முன்னதாக தளபதி விஜய்யின் கத்தி திரைப்படத்தில் பத்திரிகையாளராக சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவத்துறையை விட இது தான் முக்கிய காரணம்.. அனிதா விஜயகுமார் நெகிழ்ச்சி!
திருமணம்
இந்த நிலையில், கடந்த மார்ச் 2ம் தேதி அன்று தென்காசி மாவட்டம் கீழகலங்களில் உள்ள மாரியம்மன் கோவிலில் இவருடைய திருமணம் நடைபெற்றுள்ளது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், விவேகா என்கிற பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
எளிமையான முறையில் இவர்களுடைய திருமணம் நடந்து முடிந்ததாக சொல்லப்படுகிறது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இயக்குநர் பொன்குமாருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.