கவுதம் மேனன்
இயக்குனர் கவுதம் மேனன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். இயக்குனராக மட்டுமின்றி தற்போது நடிகராகவும் பிசியாகிவிட்டார்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துவங்கிய இவருடைய நடிப்பு பயணம் தற்போது தளபதி 69 படம் வரை வந்துள்ளது. பல படங்களில் நடித்து வந்தாலும், தன்னை ஒரு நடிகராக என்றுமே கருதவில்லை என அவரே பலமுறை கூறியுள்ளார்.


ஷங்கர் இயக்கத்தில் வெளியான கேம் சேஞ்சர் படத்தின் OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா
தற்போது இவர் இயக்கத்தில் இரண்டு தினங்களுக்கு முன் Dominic and the Ladies’ Purse திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதிரடி பதில்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் சில விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், ” சில இயக்குனர்கள் சாதியத்தையும் பிரிவினை வாதத்தையும் வைத்து படங்கள் எடுக்கின்றனர்.

ஆனால் மக்கள் அது போன்ற படங்களை விரும்புவதில்லை. மக்கள் தியேட்டருக்கு என்டர்டெயின் ஆக மட்டுமே வருகின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நான் என் பெயரை கூட சாதிய அடிப்படையிலோ அல்லது குடும்ப பரம்பரை பெயரையோ முன்னிறுத்தவில்லை” என்று கூறியுள்ளார்.

