டூரிஸ்ட் பேமிலி
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. இலங்கை தமிழர்கள், தமிழ்நாட்டிற்கு வந்தபின் நடக்கும் விஷயங்கள் குறித்து இப்படம் அழகாக பேசியிருந்தது.
முதல் நாளில் இருந்தே இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்த வண்ணம் உள்ளது. சசிகுமார், சிம்ரன், எம்.எஸ். பாஸ்கர், கமலேஷ், ரமேஷ் திலக், இளங்கோ குமரவேல் என இப்படத்தில் நடித்திருந்த அனைவரும் நடிப்பில் பட்டையை கிளப்பி இருந்தனர்.


சரியாக தேர்வு செய்து.. தனது சினிமா பயணம் குறித்து நடிகை சிம்ரன் சொன்ன ரகசியம்
என்ன தெரியுமா?
இந்நிலையில், வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் குறித்து பிரபல தெலுங்கு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி பாராட்டி உள்ளார்.
அதில், ” டூரிஸ்ட் பேமிலி ஒரு அற்புதமான படம். ஆரம்பம் முதல் இறுதி வரை என்னை ஆர்வத்துடன் வைத்திருந்தது. அபிஷன் ஜீவிந்த் அற்புதமாக இந்த படத்தின் கதையை எழுதி இயக்கி இருக்கிறார்.
இது போன்ற சிறந்த படத்தை காண தவறவிடாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து இயக்குநர் பதில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

