சுந்தர்.சி
இயக்குனர் சுந்தர்.சி, தமிழ் சினிமாவில் சூப்பரான படங்கள் இயக்கி மக்களை சிரிக்க வைத்த ஒரு பிரபலம்.
1955ம் ஆண்டு வெளியான முறை மாமன் திரைப்படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் 28 ஆண்டுகளாக தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார்.
முதல் படத்தில் வெற்றியை கண்டவர் முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், உன்னை தேடி, அன்பே சிவம், வின்னர், தலைநகரம், அரண்மனை இப்போது லேட்டஸட் ரிலீஸ் மதகஜராஜா வரை சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்துள்ளார்.
சொத்து மதிப்பு
தனது சினிமா பயண ஆரம்பத்தில் லட்சங்களில் மட்டுமே சம்பளம் வாங்கி வந்தவர் ரூ. 2 முதல் 3 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். இவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பும் ரூ. 40 முதல் 50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
சென்னையில் வீடு உட்பட சில சொத்துக்கள் வைத்துள்ள இவர் ஆடி கார்கள், BMW ஆகியவை பயன்படுத்தி வருகிறாராம்.