இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
சண்முகம் குகதாசனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபிற்கும்
இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்று (17) திருகோணமலையில் உள்ள தமிழ் அரசு கட்சி
அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
கலந்துரையாடல்
திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி
அமைப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன
இணைந்து செயற்படுவது தொடர்பாகவே இக்கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.

இதன் போது ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய பிரமுகரான நௌபரும் கொண்டதும்
குறிப்பிடத்தக்கது.

