Courtesy: H A Roshan
திருகோணமலையில், கைத்தொழில் துறைகள் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் தொழில் துறையினருக்கான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல், நேற்றையதினம்(29.01.2025) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
கைத்தொழில் துறையில் உள்ள முக்கிய பிரச்சினைகளை அடையாளம் காணும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
தடைகளுக்கான தீர்வுகள்
இதன்போது, திருகோணமலை மாவட்டத்திலுள்ள தொழில் துறையினர் எதிர்கொள்ளும் தடைகளை அடையாளம் கண்டு அதற்கான தீர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, நாடாளுமன்ற உறுப்பினர் அக்மீமன கமகே ரொஷான் பிரியசஞ்சன, கைத்தொழில் அபிவிருத்திக்குரிய மேலதிக செயலாளர் மற்றும் பணிப்பாளர் உட்பட தொழில் துறையினர் பலரும் கலந்து கொண்டனர்.