உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து எதிர்வரும் வாரம் விசேட கலந்துரையாடலில்
ஈடுபட உத்தேசித்துள்ளோம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர்
ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலை
நடத்துவதாயின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டத்தை விரைவாகத் திருத்தம் செய்ய
வேண்டும்.
எனவே, உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து எதிர்வரும் வாரம் விசேட
கலந்துரையாடலில் ஈடுபட உத்தேசித்துள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.