முன்னாள் ஜனாதிபதிகளின் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் இன்றையதினம் இடம்பெறவுள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு இது தொடர்பான விசேட கலந்துரையாடலுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் அழைப்பு விடுத்துள்ளார்.
பொலிஸாருக்கு பற்றாக்குறை
அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் அமைச்சில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக குறிப்பிட்டிருந்தார்.
பற்றாக்குறைக்கு விடையளிக்கும் வகையில் இதுவரையில் ஏனைய கடமைகளில் ஈடுபடுத்தப்பட்ட உத்தியோகத்தர்களை முறையான முறையில் அரச சேவையில் ஈடுபடுத்தி குற்றச்செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.