வெவ்வேறு வடிவங்களில் இருக்கும் கடற்றொழில் சட்டங்களை
ஒன்றிணைத்து தற்காலத்துக்கு ஏற்றவகையில் கடற்றொழில் செயற்பாடுகளுக்காக
உருவாக்கப்பட்டுவரும் புதிய சட்டமூல வரைபு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதி மண்டபத்தில் இன்று (19) யாழ். மாவட்ட
கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுதாகரனின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றுள்ளது.
உக்கிரமடையும் இஸ்ரேல் – ஈரானின் கொதிநிலை! பதற்றத்தை அதிகரிக்கும் அணுவாயுத விவகாரம்
கடற்றொழில் நடவடிக்கைகள்
கலந்துரையாலில் புதிய சட்டமூலம் தொடர்பாக கடற்றொழில்
திணைக்களப் பணிப்பாளர் நாயகத்துடன் இணைந்து கடற்றொழில் அமைச்சின் சிரேஸ்ட
ஆலோசகர் தவராசா வளவாளராக கலந்து கொண்டு சட்டமூலம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
மேலும், கடற்றொழில் நடவடிக்கை உரிமம் வழங்கலில் உள்ள பொதுவான
கோட்பாடுகள், கடற்றொழில் உரிமத்தின் கால எல்லை, கடற்றொழில் உரிமங்களின்
கைமாற்றம், வெளிநாட்டு கலன்கள் மூலம் இலங்கை நிலப்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுதலை தடை செய்தல் அல்லது கட்டுப்படுத்தல், இலங்கை
நிலப்பரப்புகளில் கடற்றொழில் செயற்பாடுகளை நடத்துவதற்கான உரிமமொன்றை
புதுப்பித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பிலும்
கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் அமைச்சின் துறை சார் உத்தியோகத்தர்கள், அமைச்சின்
சட்ட ஆலோசகர் மற்றும் துறைசார் வல்லுநர்கள், சமாச உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட
கடற்றொழில் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பெண்ணொருவரின் மரணம் தொடர்பில் பகிரங்க குற்றச்சாட்டு
டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதிக்கிடையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |