அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையின் முடிவுகள், சாதகமாக இருக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் இன்று(23) இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான தகவலை அமெரிக்காவிற்கு சென்றுள்ள இலங்கைப் பிரதிநிதிகள் தமக்கு அறிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
கூட்டறிக்கை
அமெரிக்க வரி தொடர்பான கலந்துரையாடல் குறித்து இலங்கையும் அமெரிக்காவும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

பிரதி நிதியமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட குழுவொன்று அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அதற்கான வரிவிதிப்பு தொடர்பில் ஆலோசித்துள்ளதுடன், கலந்துரையாடல்கள் சிறப்பாக நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

