ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை மற்றும் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகரவை நீக்குவதற்கு கட்சி எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்தி கொழும்பு(Colombo) மாவட்ட நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளராக இருந்த ஜயசேகர, கட்சிக்குள் தான் வகித்து வந்த பதவியில் இருந்து தன்னை நீக்குவதற்கு கட்சி எடுத்த தீர்மானங்களை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.
நீதிமன்ற உத்தரவு
அத்துடன், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தம்மை நீக்குவதற்கு எடுத்த தீர்மானத்தையும், ஜயசேகரவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படுமென கட்சியின் அப்போதைய தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் அனுப்பப்பட்ட கடிதத்தையும் எதிர்த்து, ஜயசேகர கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில், மைத்திரிபால சிறிசேன மற்றும் சிலருக்கு எதிராக தயாசிறி ஜயசேகர சமர்ப்பித்த மனுவின் உத்தரவை அறிவித்து மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.