அண்மையில் நடைபெற்ற மாகாணமட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் 22 இடங்களைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தின்
பட்டிருப்பு கல்வி வலயம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இதில் 08 முதலாம்
இடங்களும் 08 இரண்டாம் இடங்களும் 06 மூன்றாம் இடங்களும் அடங்குகின்றன.
குறிப்பாக மட்டக்களப்பு – மண்டூர் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாலய மாணவர்கள் 10 இடங்களை
பெற்றுக் கொடுத்துள்ளனர்.
பெற்ற இடங்கள்
இந்நிலையில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் 10 இடங்களையும் திருகோணமலை கல்வி
வலயம் 9 இடங்களையும் பெற்று முறையே 2 ஆம், 3 ஆம் இடங்களையும் பெற்றுக்
கொண்டுள்ளன.
இவ்வெற்றிக்காக பங்காற்றிய மாணவர்கள், சமூக விஞ்ஞான ஆசிரியர்கள்,
அதிபர்கள், பட்டிருப்பு கல்வி வலய சமூகவிஞ்ஞான உதவிக் கல்விப் பணிப்பாளர்,
வளவாளர்கள் அனைவருக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர் நன்றியினையும்
பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.