நெருக்கடி நிலையில் நாடு இருக்கும் தருணத்தில் அனுபவமற்றவர்களிடம் ஆட்சியைக் கொடுத்து நாட்டைச் சீரழிக்க வேண்டாம் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கம்பஹா, உடுகம்பல பிரதேசத்தில் நேற்று (30.04.2024) நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பொன்றில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மேற்குறித்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

தென் சீனக்கடலில் தொடரும் பதற்றம்: பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா பீரங்கி தாக்குதல்
நெருக்கடி நிலை
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மொட்டுக் கட்சியின் தலைவர்களே ரணிலை ஜனாதிபதி ஆக்கத் தீர்மானித்தார்கள். நாங்கள் அதற்கு ஆதரவளிக்க மட்டுமே செய்தோம்.

ஆனாலும் நாடு தற்போதைக்கு நெருக்கடி நிலையொன்றை எதிர்கொண்டிருக்கும் தருணத்தில் ரணில் தான் சரியான தீர்வாக இருப்பார். அதன் காரணமாகவே நாட்டு மக்கள் ஒரு ஆசுவாசத்தை உணர்ந்து கொள்ள முடிந்துள்ளது.
அவ்வாறான நிலையில் அனுபவமற்றவர்களின் கையில் ஆட்சிப் பொறுப்பை கொடுத்து நாட்டை மீண்டும் நெருக்கடி நிலைக்குள் தள்ளிவிட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தோனேசியாவில் மீண்டும் வெடித்து சிதறிய எரிமலை : விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை

ஐ.தே.க.வின் சக்தியை நாளை மே தினத்தில் வெளிப்படுத்துவோம்! ரவி கருணாநாயக்க
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

