முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ட்ரம்பை பல மணி நேரம் காத்திருக்க வைத்த புடின் : கேள்விக்குறியாகும் போர் நிறுத்தம்

அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் (Donald Trump) தொலைபேசியில் உரையாட நேரம் குறித்த பின்னர், ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்ததாக சர்சவதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ட்ரம்புடன் தொலைபேசி உரையாடலுக்கு அவர் தாமதமாகிறார் என்பதை அதிகாரிகள் எச்சரித்தும், விளாடிமிர் புடின் ஒரு வெடிச்சிரிப்புடன் அதை புறந்தள்ளியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, உக்ரைன் போர் தொடர்பில் விவாதிக்க ட்ரம்ப் அனுப்பிய தூதர் ஒருவரை சந்திக்க விளாடிமிர் புடின் சுமார் எட்டு மணி நேரம் தாமதப்படுத்தியுள்ளார்.

தொழிலதிபர்கள் 

தற்போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் விவாதிக்க நேரம் ஒதுக்கிய பின்னர், மாஸ்கோவில் தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களிடம் நேரிடையாக பேசும் வருடாந்திர ரஷ்ய நிகழ்வில் கலந்துகொள்ள சென்றிருந்தார்.

ட்ரம்பை பல மணி நேரம் காத்திருக்க வைத்த புடின் : கேள்விக்குறியாகும் போர் நிறுத்தம் | Donald Trump And Vladimir Putin Meet Up

ரஷ்ய நேரப்படி மதியத்திற்கு மேல் நான்கில் இருந்து ஆறு மணிக்குள் ட்ரம்புடன் தொலைபேசி உரையாடலுக்கு புடின் ஒப்புக்கொண்டிருந்தார்.

இருப்பினும், அதற்கு முன்னதாக தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களிடம் நேரிடையாக பேசும் நிகழ்ச்சிக்கும் புடின் ஒப்புக்கொண்டிருந்தார்.

ஜனாதிபதி மாளிகை

நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ட்ரம்புடன் பேச ஜனாதிபதி மாளிகைக்கு திரும்ப வேண்டும் என அவர் அவசரப்படவில்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது.   

ட்ரம்பை பல மணி நேரம் காத்திருக்க வைத்த புடின் : கேள்விக்குறியாகும் போர் நிறுத்தம் | Donald Trump And Vladimir Putin Meet Up

இந்தநிலையில், மாலை நான்கு மணியைத் தாண்டிய போது நிகழ்ச்சியை நடத்தும் அலெக்சாண்டர் ஷோகின் என்பவர் ஜனாதிபதி புடினிடம் அது குறித்து பேசிய நிலையில், ஆறு மணிக்கு முன்னர் ட்ரம்புடன் தொலைபேசி உரையாடல் முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அப்போதும் புடின் அவசரப்படவில்லை என்றும், கடைசியில் மாநாட்டில் இருந்து வெளியேறி ஜனாதிபதி மாளிக்கைக்கு அவர் வந்து சேரும் போது மாலை ஐந்து மணி என தெரிவிக்கப்படுகின்றது.

ட்ரம்பிடமிருந்து சலுகை

அமெரிக்கா உக்ரைனுடன் ஒப்புக்கொண்ட 30 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை விளாடிமிர் புடின் இதுவரை ஏற்கவில்லை.

இந்த உரையாடலில் புடினை ஒப்புக்கொள்ள வைக்க தமக்கு கிடைத்த வாய்ப்பு இதுவென ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

ட்ரம்பை பல மணி நேரம் காத்திருக்க வைத்த புடின் : கேள்விக்குறியாகும் போர் நிறுத்தம் | Donald Trump And Vladimir Putin Meet Up

இருப்பினும், ட்ரம்பிடமிருந்து சலுகைகளைப் பெறுவதற்காக புடின் போர் நிறுத்தத் திட்டத்தை தாமதப்படுத்தி வருகிறார் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, 2014 இல் ரஷ்யா கைப்பற்றிய உக்ரைன் பிரதேசமான கிரிமியாவை இனிமேல் ரஷ்ய பகுதி என ட்ரம்ப் ஆதரிப்பார் என தெரிவிக்கப்பட்டாலும் உக்ரைன் தரப்பில் அதை ஏற்றுக்கொள்வார்களா என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.