முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதியின் பெயரை பிழையாக எழுதிய வெள்ளை மாளிகை

அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பெயரை பிழையாக எழுதியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கம் பல நாடுகளுக்கு எதிராக வரி விதிப்பு தொடர்பில் அந்தந்த நாடுகளின் தலைவர்களுக்கு பிரத்தியேக கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் மீது 30 வீத வரி விதிப்பு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமாரவிற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாரபூர்வ கடிதமா…

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் ஜனாதிபதியின் பெயர் அருணகுமார திசாநாயக்க என எழுதப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்படடுள்ளது.

ஜனாதிபதியின் பெயரை பிழையாக எழுதிய வெள்ளை மாளிகை | Donald Trump Gets President Akd S Name Wrong

வெள்ளை மாளிகை அதிகாரிகளினால், ஜனாதிபதியின் பெயர் அருணகுமார என எழுதப்பட்ட கடிதமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையினால் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30 வீத வரி அறவீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வரி 44 வீதமாக அறவீடு செய்யப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் பெயர் பிழையாக எழுதப்பட்ட விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

எவ்வாறெனினும் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு வரும் கடிதம் வெள்ளை மாளிகையினால் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ கடிதமா என்பதனை அரசாங்கத் தரப்பு இன்னமும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்