ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை மேன்மைதாங்கி, அதி மேதகு என விளிக்க வேண்டாம் என தேசிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினர் கே.டி. லால்காந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அநுராகுமார ஜனாதிபதியாக பதவி வகித்தாலும் அவரை தோழர் என அழைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
தேசிய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கௌரவ பெயர்கள்
தற்பொழுது இந்த நாட்டின் ஜனாதிபதியாக கடமையாற்றி வரும் அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி அநுரகுமார என விளிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
எங்களது ஜனாதிபதி, அதி மேதகு, மேன்மைதாங்கிய உள்ளிட்ட கௌரவ பெயர்களினால் விளிக்க வேண்டிய அவசியமில்லை என லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.