அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமலும், பற்றாக்குறையாகவும், அனைத்திற்கும் வரிசை என இருந்த நாட்டை இதனை இரண்டு வருடத்திற்குள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாற்றியிருக்கின்றார் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் (Batticaloa) இன்றையதினம்(23.08.2024) ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டை மீட்கக்கூடியவர்
” நாடு இருளில் மூழ்கடிக்கும்போது நாட்டை மீட்கக்கூடியவர் யார் என்பதை அறிந்து அப்போதே நான் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) பெயரை சிபாரிசு செய்திருந்தேன்.
இவரால்தான் இப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என நான் நம்புகின்றேன்.
பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களை தமிழ் பிரதிநிதிகள் சந்திக்கும்போது 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவீர்களா என கேட்கின்றார்கள் அதனை அவர்களிடம் கேட்க வேண்டியதில்லை.
அனைத்தும் அரசியலமைப்பிலே உள்ளது. அதனைப் பெறுவதற்கு நாங்கள்தான் முன்னெடுக்க வேண்டும்” என்றார்.