முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டக்ளஸ் – சித்தார்த்தன் சந்திப்பு : முற்றாக மறுக்கும் கஜேந்திரகுமார்

எங்கள் கூட்டணியிலிருந்து ஒரு சிலர் டக்ளஸ் தேவானந்தாவை (Douglas Devananda) சந்திக்கப்போவதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது  என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்

இலங்கைத் தமிழரசுக்கட்சி (ITAK) – ஈபிடிபி (EPDP) சந்திப்பு மற்றும் கூட்டை நியாயப்படுத்துவதற்காகவே இந்த தவறான செய்தி பரப்பப்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் (Colombo)இன்று (06) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொய்யான செய்தி

அவர் மேலும் தெரிவித்ததாவது, ”எங்கள் கூட்டணியிலிருந்து ஒரு சிலர் குறிப்பாக சுரேஸ் பிரேமசந்திரனும் (Suresh Premachandran) சித்தார்த்தனும்  (Dharmalingam Siddarthan) ஈபிடியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கப்போவதாகவும், அவர்களின் ஆதரவை ஆட்சியமைப்பதற்கு கோருவதற்கு நாங்கள் ஒரு சிலர் நடவடிக்கை எடுத்திருந்ததாக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்த செய்தி முற்றிலும் தவறானது.

டக்ளஸ் - சித்தார்த்தன் சந்திப்பு : முற்றாக மறுக்கும் கஜேந்திரகுமார் | Douglas Siddarthan Meeting Not True Gejendrakumar

அந்த செய்தி திட்டமிட்ட வகையிலே, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் (DTNA), தமிழ்தேசிய பேரவைக்கும் இடையில் நடைபெற்ற, கொள்கை ரீதியிலான ஒப்பந்தத்தை கொச்சைப்படுத்துவதற்காக திட்டமிட்டு பரப்பப்பட்ட அந்த பொய்யான செய்தியை நாங்கள் நிராகரிக்கின்றோம், கண்டிக்கின்றோம்.

இன்றைக்கு எங்களிற்கு நன்றாக தெரியக்கூடியதாகவுள்ளது என்னவென்றால், அந்த செய்தி நன்கு திட்டமிடப்பட்டு பரப்பப்பட்டமைக்கான காரணம், தமிழரசுக்கட்சி ஈபிடிபியின் தலைவரை சந்திப்பதற்கு முடிவெடுத்திருந்த ஒரு நிலையில், அந்த பொய்ச்செய்தியை பரப்பிய ஊடகங்கள் தமிழரசுக்கட்சிக்கு மிகவும் விசுவாசமாக செயற்படுவதனால், தமிழரசுக்கட்சி ஈபிடிபியுடன் நடத்தவிருக்கின்ற சந்திப்பையும் அவர்களின் அந்த கூட்டையும் நியாயப்படுத்துவதற்காக தமிழ்தேசிய பேரவையும் ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியும் கூட ஈபிடிபியுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு தயாராகியிருந்தன, தமிழரசும் அதைத்தான் செய்தது, ஆனால் ஈபிடிபி இறுதியில் வந்து தமிழரசுடன் இணைய விரும்பியது என்பதை சுட்டிக்காட்டி அந்த கூட்டை நியாயப்படுத்துவதற்காக திட்டமிட்டு பரப்பப்பட்ட செய்தியாகும். ” என தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/jNnYRYDq1fw

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.