முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வேட்புமனுவை தாக்கல் செய்த டக்ளஸ் தரப்பு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தாக்கல்
செய்துள்ளது.

யாழ். மாவட்ட உதவி தேர்தல் அத்தாட்சி அலுவலகத்தில் இன்று (07.10.2024) நண்பகல் 12 மணியளவில் கட்சியின் செயலாளர் நாயகமும் கட்சியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல்
மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குறித்த
வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, 2024ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத்
தேர்தலில், யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் ஈபிடிபி
வேட்பாளர்களின் பெயர் பட்டியல் உள்ளடங்கிய வேட்பு மனு, யாழ்ப்பாணம்
கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அத்தாட்சி அலுவலரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் போட்டியிட காரணம்

இதேவேளை, வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து
தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, வடக்கின் ஐந்து மாவட்டங்கள், கிழக்கின் மூன்று மாவட்டங்கள் மற்றும் கொழும்பு
உள்ளடங்களாக ஒன்பது மாவட்டங்களில் ஈ.பிடி.பி
தனது சின்னமான வீணைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

வேட்புமனுவை தாக்கல் செய்த டக்ளஸ் தரப்பு | Douglas Side Filed The Nomination

இதன்போது, ஊடகவியலாளர்கள் கொழும்பில் இம்முறை ஈ.பி.டி.பி போட்டியிடுவதற்கு
விசேட காரணங்கள் ஏதும் உண்டா என கேட்டதற்கு,

கொழும்பிலுள்ள எமது கட்சியின் ஆதரவாளர்கள் அங்கு போட்டியிடுமாறு
கோரிக்கை விடுத்திவந்திருந்தனர். அவர்களது கோரிக்கையின் அடிப்படையில் இம்முறை
அந்த மாவட்டத்திலும் ஈ.பி.டி.பி போட்டியிடுகின்றது என்றார்.

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி

இதேநேரம், ஈ.பிடி.பி ஆரம்பகாலம் முதற்கொண்டு தொடர்ச்சியாக கூறிவருகின்ற தேசிய
நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்லின பல மொழி பேசும் மக்கள் வாழும் இடமான கொழும்பு
மாவட்டத்தில் போட்டியிடுகின்றது எனவும் டக்ளஸ் கூறியுள்ளார்.

வேட்புமனுவை தாக்கல் செய்த டக்ளஸ் தரப்பு | Douglas Side Filed The Nomination

அந்தவகையில், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது கட்சியின்
இலக்கை அடைவதற்கு வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் எமது மக்கள் எமது
கட்சிக்கு அணிதிரண்டு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்வார்கள் என
நம்புவதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.