நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, ஜெனீவாவில் சென்று தமிழ் மக்களுக்கு குரல் கொடுப்பது போல் நடித்து கொண்டிருக்கின்றார் என வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அர்ச்சுனா எம்பிக்கு எதிராக இந்த கண்டனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, “இராமநாதன் அர்ச்சுனா, தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்றார் என நாங்கள் நினைத்தோம்.
ஆனால், அவர் ஜெனீவாவில் சென்று தனக்கு பாதுகாப்பு இல்லை என குறிப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்.
அதேபோல் அவரின் தந்தையை கடத்திய விடயம், தன்னை பாதித்து விட்டது போல் விமர்சித்து கொண்டிருக்கின்றார்” என குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்,