டிராகன்
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து 2025ம் ஆண்டு ரூ. 100 கோடி வசூல் டிராகன் திரைப்படம் ஈட்டியுள்ளது. இப்படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தந்து.
லவ் டுடே படத்தை தொடர்ந்து மீண்டும் ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இப்படத்தில் நடித்திருந்தார். மேலும் லவ் டுடே படத்தை தொடர்ந்து இப்படமும் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
97வது ஆஸ்கர் அகாடமி விருதுகள்: வரலாறு படைத்த பால் டேஸ்வெல்
அதிக வசூல் செய்த டிராகன்
இந்த நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தளபதி விஜய்யின் கோட் படத்தை விட அதிக வசூல் டிராகன் செய்துள்ளது. கோட் திரைப்படம் ரூ. 13.5 கோடி வசூல் செய்திருந்த நிலையில், டிராகன் ரூ. 14 கோடிக்கும் மேல் அங்கு வசூல் செய்துள்ளது.
இதன்மூலம் டிராகன் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், 10 நாட்களில் கோட் படத்தை வசூலை விட அதிக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.