டிராகன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் பிரதீப் ரங்கநாதன். இயக்குநராக அறிமுகமாகி, பின் ஹீரோவாக தன்னை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டிராகன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. 10 நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்து சாதனை படைத்துள்ளது.
விஜய் மொதல்ல அதை செய்யட்டும்.. ஆவேசமாக பேசிய நடிகர் விஷால்
ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே மற்றும் டிராகன் இரண்டு திரைப்படங்களும் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்துள்ளது. இதன்மூலம் இதுவரை எந்த ஒரு அறிமுக ஹீரோவும் செய்யாத சாதனையை பிரதீப் செய்துள்ளார்.
வசூல் விவரம்
இந்த நிலையில் 11 நாட்களை வெற்றிகரமாக டிராகன் படம் கடந்துள்ள நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 110 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.