ஜேர்மனியில் விமான சேவை தடைபடுவது தொடர்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வான்வெளியில் ட்ரோன்கள் பறக்கவிடப்படுவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் வான்வெளிப் பகுதிகளில் ட்ரோன் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் கடந்த செப்டம்பரில் அது அதிகமாகியுள்ளது.
இடைக்காலமாக தடை
இதையடுத்து ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் விமானப் போக்குவரத்து இடைக்காலமாக தடைபடுவது தொடர்ந்துள்ளது.

இதன் எதிரொலியாக, கடந்த மாதத்தில் ஜேர்மனியின் முனிச் விமான நிலையம் வெறும் 24 மணி நேர கால அவகாசத்துக்குள் இரண்டு முறை மூடப்பட்டுள்ளது.
அத்தோடு, தலைநகர் பெர்லின் விமான நிலையத்தில் தடையை மீறி பறந்த ஒற்றை ட்ரோனால் விமான சேவை பாதிப்புக்குள்ளான நிலையில் பிறகு சீரடைந்துள்ளது.
போக்குவரத்து
பெர்லினின் பிராண்டென்பர்க் விமான நிலையத்தில் கடந்த 31 ஆம் திகதி இரவில் ட்ரோன் பறந்துள்ளது.
இதனையடுத்து, விமான இயக்கம் அங்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் பெர்லினின் பிராண்டென்பர்க் விமான நிலையத்தில் விமான சேவை அன்றை தினம் இரவு 8.08 மணியிலிருந்து 9.58 மணி வரை சுமார் இரண்டு மணி நேரம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இதையடுத்து, இடைக்காலமாக தடைபட்ட விமானப் போக்குவரத்து நேற்று (01) காலையில் சீராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

