முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் வேட்புமனு தாக்கல் செய்த ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி

புதிய இணைப்பு

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி (DTNA) யாழ்ப்பாணத்தில் (Jaffna) வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

இன்று (20) காலை வல்வெட்டித்துறை நகரசபை தவிர்ந்த யாழில் உள்ள ஏனைய உள்ளூராட்சி
மன்றங்களுக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தலைமையில் வேட்புமனு தாக்கல்
செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

யாழில் வேட்புமனு தாக்கல் செய்த ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி | Dtna Contest In Jaffna With 2 Parties Selvam Mp

இரண்டாம் இணைப்பு

வவுனியாவில் வேட்புமனு தாக்கல் செய்த ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள்
ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு கடந்த 17 ஆம் திகதிமுதல் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் வவுனியா (Vavuniya) மாநகரசபையில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஜனநாயக
தமிழ்த்தேசிய கூட்டணி (DTNA) இன்று (19) தாக்கல் செய்தது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் (Sivasakthy Ananthan) தலைமையில், கூட்டணியின்
வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் சகிதம் தமது வேட்புமனுவை இன்று மாலை
கையளித்திருந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளில் ஜனநாயக தமிழ்த்தேசிய
கூட்டணி சங்குசின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

யாழில் வேட்புமனு தாக்கல் செய்த ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி | Dtna Contest In Jaffna With 2 Parties Selvam Mp

முதலாம் இணைப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியானது இரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சிகளுடன் இணைந்து யாழ் (Jaffna) தேர்தல் தொகுதியில் போட்டியிட உள்ளதாக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.

மன்னாரில் (Mannar) உள்ள அலுவலகத்தில் இன்று (10) மதியம் இடம்பெற்ற ஊடக
சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி (வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து சபைகளிலும் போட்டியிட உள்ளது.

எவ்வாறு போட்டியிடுகின்றது

யாழ்ப்பாணத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன் (E. Saravanapavan) மற்றும்
சந்திரகுமார் (Chandrakumar) ஆகியோரின் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட உள்ளோம். ஏனைய இடங்களில்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக அதன் அங்கத்துவக் கட்சிகள் இணைந்து
போட்டியிட உள்ளோம்.

யாழில் வேட்புமனு தாக்கல் செய்த ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி | Dtna Contest In Jaffna With 2 Parties Selvam Mp

அதற்கான கட்டுப்பணத்தை செலுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஒட்டுமொத்தமாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைத்து சபைகளிலும் போட்டியிடும்.

மன்னார் பிரதேச சபைக்கான தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கு
விசாரணை மீள பெற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அதற்கான தேர்தல் அறிவிக்கப்படும்
சந்தர்ப்பம் உள்ளது.

தனித்து போட்டியிடவுள்ள கட்சி 

எனவே மன்னார் பிரதேச சபை தேர்தலில் போட்டியிட நாங்கள்
தயாராக உள்ளோம். ஜனநாகய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் மாத்திரமே ஒரு
கூட்டாக இத் தேர்தலில் போட்டியிட உள்ளது.

யாழில் வேட்புமனு தாக்கல் செய்த ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி | Dtna Contest In Jaffna With 2 Parties Selvam Mp

அண்மையில் 9 கட்சிகள் இணைந்து ஒரு கலந்துரையாடல் மத்திரமே
முன்னெடுக்கப்பட்டது. எனினும் 9 கட்சிகளும் இணைந்துள்ளோம் என்று
தெரிவிக்கவில்லை.

9 கட்சிகளும் இணைந்து கலந்துரையாடலை மாத்திரமே முன்னெடுத்தோம். எனினும் இக்கூட்டு யாழ்ப்பாணத்தில் மாத்திரமே அமைய இருக்கின்றது.

முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் (C. V. Wigneswaran) கட்சி தனித்து போட்டியிட
உள்ளது. ஐங்கரநேசனின் (P. Ayngaranesan) கட்சி தனித்து போட்டியிடுகின்றதா? இல்லையா என்று
தெரியவில்லை. எனினும் இந்த அணியில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார்.” என தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.