ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் (DTNA) உயர்மட்டக் குழுக்கூட்டம் வவுனியா (Vavuniya) கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் ஜனநாயக தமிழ்தேசியக் கூட்டமைப்பு இன்று (05) முதற்தடைவையாக கூடியுள்ளது.
இந்த நிலையில் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் எதிர்வரும்
உள்ளூராட்சி தேர்தலை சந்திக்கும் விதம் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டத்தில் கலந்துகொண்டோர்
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்
செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன்,
சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், கோ.கருணாகரம், எம்.கே.சிவாஜிலிங்கம்,
ந.சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் ப.வேந்தன், பவான் உட்பட
முக்கிஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.