நடிகர் அஜித்
பிரபலங்கள் அனைவருக்குமே சினிமாவை தாண்டி மற்ற விஷயங்கள் மேல் ஒரு Passion இருக்கும்.
அப்படி அஜித்திற்கு என்ன என்றால் அவருக்கு கார் ரேஷ் மிகவும் பிடிக்கும் என்பது ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். தற்போது அஜித் துபாயில் நடைபெறும் 24 Hours ரேஸில் தனது குழுவினருடன் கலந்துகொள்ள இருக்கிறார்.
சமீபத்தில் துபாயில் நடந்த பயிற்சி போட்டியில் கூட அவரது கார் விபத்தில் சிக்கிய வீடியோ வெளியாக ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள்.
ரேஸ் பற்றிய விவரம்
இந்த ரேஸிங்கில் ஒவ்வொரு டீமுக்கும் 2 முதல் 4 டிரைவர்கள் என இருப்பார்கள். கேப்டன் தான் குறைந்தபட்சம் 60-70% நேரத்திற்கு ஓட்ட வேண்டும்.
அதாவது 14 முதல் 18 மணி நேரம் கேப்டன் தான் ஓட்ட வேண்டும்.
இன்று இந்த துபாய் 24 ஹவர்ஸ் ரேஸ் தொடங்குகிறது, அஜித்தின் டீம் ஜெயிப்பதை காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.
சினிமாவை தாண்டி தனது Passionஐ நோக்கி பயணிக்கும் அஜித் இதில் வெற்றிப்பெற சினிஉலகம் சார்பாக வாழ்த்துக்கள்.
மற்றபடி இந்த போட்டி குறித்த முழு விவரத்தை கீழே காணுங்கள்,