Dude
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த Dude திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் இப்படம் பட்டையை கிளப்பி வருகிறது. முதல் நாளில் இருந்தே வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வரும் Dude, இதுவரை நான்கு நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.
தீபாவளிக்கு வெளிவந்து அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. டாப் 10 லிஸ்ட் இதோ
வசூல்
இந்த நிலையில், இப்படம் உலகளவில் நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, Dude திரைப்படம் நான்கு நாட்களில் ரூ. 80+ கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலை செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் லவ் டுடே மற்றும் டிராகன் படங்களை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் Dude படமும் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்தால் அது மிகப்பெரிய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.