வீர தீர சூரன்
தமிழ் சினிமாவில் தற்போது இளம் நடிகையாக களைக்கொண்டு இருக்கிறார் துஷாரா விஜயன். சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமான இவர், பின் நட்சத்திரங்கள் நகர்கிறது படத்தில் நடித்தார்.
கடந்த ஆண்டு தனுஷுடன் இவர் இணைந்து நடித்திருந்த ராயன் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், அதை தொடர்ந்து வெளிவந்துள்ள திரைப்படம் தான் வீர தீர சூரன். இப்படத்தின் மூலம் சியான் விக்ரமுடன் இணைந்து துஷாரா விஜயன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.
புதிய லுக்கில் ஆளே மாறிப்போன அஜித்.. செம மாஸ்! புகைப்படத்தை பாருங்க
இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் உருவான இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை உலகளவில் ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.
துஷாரா விஜயன் பதிவு
இந்த நிலையில், வீர தீர சூரன் திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்திருக்கும் சிறந்த வரவேற்பு நன்றி தெரிவித்து துஷாரா விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில் “வீர தீர சூரன் படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் அளவற்ற அன்பிற்கு நன்றி. கலைவாணியின் பயணம் மிக ஸ்பெஷலானது. இந்த கதாபாத்திரம் என்றும் என் மனதில் நிலைத்து இருக்கும். இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குநர் அருண்குமாருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். விக்ரமுடன் திரையை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த சந்தோஷம். ஜி.வி.பிரகாஷின் இசை கலைவாணிக்கு மேஜிக்கலாக உயிர்கொடுத்துள்ளது. எஸ்.ஜே . சூர்யா மற்றும் சுராஜ் உடன் நடித்தது மிகவும் பெருமை” என நன்றி தெரிந்துள்ளார்.
View this post on Instagram