ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் சாந்தமருது குண்டு வெடிப்பின் போது முதலில் வந்த இராணுவ குழுவே சாராவை விரட்டியதாகவும், அப்போது கிழக்கு இராணுவக் கட்டளைத் தளபதியாக இருந்த பாதுகாப்பு பிரதியமைச்சர் அனுர ஜயசேக்கரவுக்கு அது தெரியும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹுமான் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதி கிடைப்பதற்கான சாத்தியம்
அவர் மேலும் குறிப்பிட்டதாவது
ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய உறுப்பினர்களை அரசின் உயர் பதவிகளில் வைத்துக் கொண்டு விசாரணை செய்வது சாத்தியமற்றது.

அவர் சாந்தமருது குண்டு வெடிப்பின் போது கிழக்கு இராணுவ கட்டளைத் தளபதியாக இருந்ததாக ஒப்புக் கொண்டதோடு அதில் சில புலனாய்வு உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டுள்ளதையும் குறிப்பிடார் ஏன் இப்போது அவருக்கு அவர்களை கைது செய்து விசாரணை செய்ய முடியவில்லை என கேள்வி எழுப்பினார்.
அத்தோடு சம்பவத்தில் தொடர்புடையவர்களை அரசாங்கத்தில் வைத்துக் கொண்டு நீதியை தருவோம் என்பது சாத்தியமற்றது என்றார்.

