முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சர்ச்சைக்குரிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : முக்கிய புள்ளிகள் குறித்து அநுர தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு (Easter attack) பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பது தொடர்பான தகவல்கள் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். 

தெய்யந்தர பிரதேசத்தில் இன்று (30.03.2025) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு மீண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவுகூரப்படும், திகதிக்கு முன்னர் அதற்கு பொறுப்புக்கூறக்கூடிய குழுவொன்றை வெளியிடுவது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் முயற்சி செய்து வருகின்றது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

அதை செய்ய வேண்டும் தானே? உங்களுக்குத் தெரியும் முன்னாள் அமைச்சர்கள் மூவர் இதுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

சர்ச்சைக்குரிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : முக்கிய புள்ளிகள் குறித்து அநுர தகவல் | Easter Attack Details Released Next Month Anura

ஒருவர் தலைமறைவாகிவிட்டார். அப்படியே மறைந்தே இருக்கட்டும் பதற்றப்படத் தேவையில்லை.” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் இந்த குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

குண்டு வெடிப்பு

மூன்று தேவாலயங்கள் உள்ளிட்ட ஐந்து நட்சத்திர உணவு விடுதிகள் சிலவற்றிலும், காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையில் இந்த குண்டுத் தாக்குதல்கள் நடந்தன. 

இதில், வெளிநாட்டவர்கள், காவல்துறை உள்ளிட்ட குறைந்தது 272 பேர் வரை கொல்லப்பட்டதுடன், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சர்ச்சைக்குரிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : முக்கிய புள்ளிகள் குறித்து அநுர தகவல் | Easter Attack Details Released Next Month Anura

கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு திருப்பலி நிகழ்வுகள் நடைபெற்ற போது குண்டுகள் வெடித்தன.

ஏனைய குண்டுகள் கொழும்பின் நடுப்பகுதியில் அமைந்திருந்த சங்கிரி-லா உணவகம், சினமன் கிராண்ட் உணவகம், கிங்ஸ்பரி உணவகம் ஆகிய மூன்று ஐந்து-நட்சத்திர உணவு விடுதிகளில் வெடித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.