உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் விசாரணைகள் குறித்த தகவல்களை அம்பலப்படுத்தக் கூடாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் இவ்வாறு தகவல்களை வெளியிடக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தயாசிறியின் கேள்வி..
விசாரணைகள் குறித்த தகவல்களை வெளியிடுமாறு நாடாளுமன்றத்தினால் உத்தரவிடப்படக் கூடாது எனவும் அவர் கோரியுள்ளார்.
மறைமுக அடிப்படையில் விசாரணைகளை சீர்குலைப்பதற்கு சிலர் முயற்சிப்பதாகவும் அதற்கு இடமளிக்கப்படக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அண்மையில் கோரியிருந்தார்.
இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.