முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு – இன்று அரசை அதிர வைப்பேன்: எச்சரிக்கும் கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் கூறும் பொய் தொடர்பில் இன்றையதினம் (03) நாட்டுக்கு அம்பலப்படுத்தப்படவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.  

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரை தேடி வருவதாக பொய்யை எழுதி அரசாங்கம் உள்ளாட்சி தேர்தலை குறி வைத்து நாடகம் நடத்த தயாராகி வருகின்றது.

விசேட அம்பலப்படுத்தப்படவுள்ளது

இது தொடர்பில் சகல ஆதாரங்களுடனும் உதய கம்மன்பில இன்றைய தினம் அம்பலப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு - இன்று அரசை அதிர வைப்பேன்: எச்சரிக்கும் கம்மன்பில | Easter Attacks Investigation Report Gammanpila

அந்தவகையில் இன்றையதினம் (3.2.2025) பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அவர் இதனை வெளிப்படுத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் தஞ்சம் கோரி வெளிநாட்டில்

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து செனல் 4 அலைவரிசைக்கு தகவல்களை வழங்கிய அசாத் மெளலானா என்றழைக்கப்படும் மொஹமட் மஹிலார் மொஹமட் ஹன்ஸீர் மேலும் தகவல்களை வழங்க தயாராகவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு - இன்று அரசை அதிர வைப்பேன்: எச்சரிக்கும் கம்மன்பில | Easter Attacks Investigation Report Gammanpila

எனினும் அசாத் மௌலானா நாடு திரும்புவது தொடர்பில் உறுதியான தீர்மானம் எதனையும் இதுவரை எடுக்கவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில். அசாத் மௌலானா அரசியல் தஞ்சம் கோரி வெளிநாட்டில் தங்கியுள்ளார்.

அசாத் மௌலானா, சுயவிருப்பின் பேரில் நாடு திரும்பி தாமாக முன்வந்து உயிர்த்த ஞாயிறு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவிருப்பதாக சட்டவல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

YOU MAY LIKE THIS VIDEO

https://www.youtube.com/embed/BoPdMUzVxGI

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்