அண்மையில் நியமிக்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் விடயத்தில் பாரபட்சம் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பில் அங்கிருக்கக் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வினையாற்றி இருந்தார்கள்.
குறிப்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத், பேரவை உறுப்பினர்கள் விடயத்தில் பாரபட்சம் இருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
இவ்வாறாக, தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலையீட்டால் இந்த விடயம் தாமதப்படுத்தப்பட்டது.
ஆனாலும் தற்போது எதிர்மறையான நிலையை எட்டி இருக்கின்றது.
அதாவது கிழக்கு மாகாண பேரவை உறுப்பினர்களில் வெளிவாரியாக 15 பேரை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களில் 7 சிங்களவர்களும் 5 தமிழர்களும் 3 முஸ்லீம்களும் என்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் 2ஆக இருந்த சிங்கள உறுப்பினர்கள் எண்ணிக்கையே இன்று 7ஆக அதிகரித்துள்ளது.
இதுவே கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் அதிகளவான சிங்கள உறுப்பினர்கள் வெளிவாரியாக நியமிக்கப்பட்மை முதல் தடவையாகும்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…

