முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யுத்த காலத்திலும் எந்தவொரு பரீட்சையையும் நிறுத்தவில்லை : கல்வி அமைச்சர் பெருமிதம்

நாட்டில் ஏற்பட்ட பல சவால்களுக்கு மத்தியிலும் பரீட்சைகளை நடத்திக் காட்டியுள்ளோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.

இதேவேளை யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் எந்தவொரு பரீட்சையையும் நிறுத்தவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இன்று (12) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “1991 இல் நகர சபைக்கு நான் சென்றேன். 2001 ஆம் ஆண்டுதான் நாடாளுமன்றத்துக்கு வந்தேன். அதையும் கூட தவறாக தான் சொன்னார்கள்.

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலம் 

நகர சபை உறுப்பினராகவும் கோட்டை துணை மேயராக இருந்திருக்கின்றேன். அதேபோல் 5 வருடங்கள் மேல் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தேன். எந்த விதமான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை.

2005 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு வரை கல்வி அமைச்சராக இருந்தேன். நாட்டில் யுத்தம் உக்கிர நிலையில் இருந்தது. வடக்கு கிழக்கில் எந்த ஒரு பரீட்சையையும் நாங்கள் நிறுத்தவில்லை.

யுத்த காலத்திலும் எந்தவொரு பரீட்சையையும் நிறுத்தவில்லை : கல்வி அமைச்சர் பெருமிதம் | Education Minister Susil Premajayantha Speech

அதேபோல தீவு பிரதேசங்களில் கடற்படையினரின் உதவியுடன் தான் நாங்கள் வினாத்தாள்களை கொண்டு சென்றோம். அவ்வாறான சவால்களுக்கு மத்தியில் தான் நாங்கள் அமைச்சின் நடவடிக்கைகளை முன்னெடுத்து சென்றோம்.

இந்த முறை நான் இதனை பொறுப்பேற்கின்ற பொழுது அமைச்சரவை விலகியிருந்தது. அதிபர் கூட விலகியிருந்தார். பிரதமரை அழைத்து அவருக்கு முன்னால் தான் நான் இதனை பொறுப்பேற்றேன்.

முன்னாள் அதிபர் பதவி விலகல் 

அதனை பொறுப்பேற்ற பொழுது அந்த நிறுவனத்தின் தலைவரின் ஆலோசனையின் பேரில் அவர்கள் செயற்பட்ட காரணத்தினாலேயே முன்னாள் அதிபர் பதவியை விட்டு விலக வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.

5 நாட்கள், 6 நாட்கள் பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அரசியல் நிறுவன தலைவர்கள் ஒளிந்து கொண்டிருந்தார்கள். அதனுடைய நிறுவன தலைவர்கள் கூட ஒளிந்து கொண்டிருந்தார்கள்.

யுத்த காலத்திலும் எந்தவொரு பரீட்சையையும் நிறுத்தவில்லை : கல்வி அமைச்சர் பெருமிதம் | Education Minister Susil Premajayantha Speech

போராட்டக்காரர்கள் அவருடைய நிறுவனத்துக்கு உள்ளே சென்றார்கள்.

நாங்கள் நேரடியாக இதனை கண்டோம். யாரும் இதனை பொறுப்பேற்றுக் கொள்ள இல்லாத சந்தர்ப்பத்திலே தான் இந்த அமைச்சை பொறுப்பேற்று கொண்டேன்.

இரண்டு வருடங்களுக்கு மேல் பொருளாதார பிரச்சினை, கொரோனா பிரச்சினை போன்றவற்றால் வீழ்ச்சிப்பாதையில் இருந்த கல்வியினை நாங்கள் உயர்த்தியிருக்கிறோம்.“ என தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.