நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் 662 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 642 முறைப்பாடுகளும், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 5 முறைப்பாடுகளும், ஏனைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 15 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.
தேசியத் தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 215 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையங்களுக்கு 447 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழு
இந்தநிலையில், 522 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதுடன், 140 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, எல்பிட்டிய (Elpitiya) பிரதேச சபைத் தேர்தலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.
நாளையதினம் (26.10.2024) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (R. M. A. L. Ratnayake) குறிப்பிட்டுள்ளார்.