Courtesy: thavaseelan
நாட்டில் இடம்பெறவுள்ள ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில்
விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியின் புதுக்குடியிருப்பு
பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் முத்துச்சாமி முகுந்தகஜன் தலைமையில்
தேர்தல் பிரசார பணி மாங்குளம் நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் மக்களின் எதிர்பார்ப்பு அமைப்பின் ஆணையாளர் சமன்த பண்டார மற்றும்
கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது வர்த்தக நிலையங்கள் மற்றும் பேருந்துகளில்
மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி சிலிண்டர் சின்னத்துக்கு வாக்கு
சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.