முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கட்டுப்பணத்தை வைப்பிலிடும் வேட்பாளர்கள்: தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

தற்போது அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் வேட்பாளர்களால் கட்டுப்பணம் வைப்பிலிடப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

வைப்பிலிடப்படும் கட்டுப்பணம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2025ஆம் ஆண்டு 1ஆம் இலக்க உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் பிரகாரம் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இதற்கமைவாக தற்போது அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் வேட்பாளர்களால் கட்டுப்பணம் வைப்பிலிடப்படுகின்றது.

கட்டுப்பணத்தை வைப்பிலிடும் வேட்பாளர்கள்: தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் | Election Commission In Sri Lanka

எதிர்வரும் 17ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் 20 ஆம் திகதி (வியாழக்கிழமை) நண்பகல் வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

இதற்கான அறிவிப்புக்கள் மற்றும் ஆலோசனைகள் சகல தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளன.

336 பிரதேச சபைகளுக்குத் தொகுதி அடிப்படையில் 4 ஆயிரத்த்து 872 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இம்முறை தேர்தல் நடத்தப்படுகின்றது.

வாக்களிக்கத் தகுதி

2024ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பின் பிரகாரம் 1 கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பம் தற்போது கோரப்படுகின்றது.

கட்டுப்பணத்தை வைப்பிலிடும் வேட்பாளர்கள்: தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் | Election Commission In Sri Lanka

நாளைமறுதினம் (12) விண்ணப்பக் கோரல் நிறைவடையும்.

ஆகவே, சரியான தகவல்களுடன் விண்ணப்பிக்குமாறு தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அரச உத்தியோகத்தர்களிடம் வலியுறுத்துகின்றோம்.

2023 ஆம் ஆண்டு 3 ஆம் இலக்கத் தேர்தல் செலவினங்களை ஒழுங்குப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் வேட்புமனு நிறைவடைந்து ஓரிரு நாட்களில் தேர்தல் பிரச்சார செலவு தொடர்பில் அறிவிக்கப்படும்.

இந்த விடயம் குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பிரதிநிதிகளுடன் விரிவாகக் கலந்துரையாடுவோம்.

ஏனைய தேர்தல்களை காட்டிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பணிகள் விரிவானவை. ஆகவே, வாக்கெடுப்பு தொடர்பான திகதி எதிர்வரும் 20ஆம் திகதிக்குப் பின்னரே அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.