நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுமந்திரனுக்கான (M. A. Sumanthiran) வெற்றிவாயப்பு அரிதாகி வருவதாக தெரியவருகின்றது.
தற்போதைய நிலவரப்படி சுமந்திரன் மிகவும் பின்னணியில் இருப்பதாக வாக்கு எண்ணும் நிலையத்தில் இருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
யாழ்(Jaffna) மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி ஒரே ஒரு ஆசனம் மாத்திரமே பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையில் முன்னணி வகித்துவருகின்ற தேசிய மக்கள் சக்தி இரண்டு ஆசனங்களை எடுக்கக்கூடிய சாத்தியம் இருப்பதால், தமிழரசுக் கட்சி ஒரே ஒரு ஆசனத்தை மாத்திரமே பெறக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும், அந்த ஆசனத்தை சிறீதரன் கைப்பற்றலாம் என்றும் வாக்கெண்ணும் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான பின்னணியில், வடக்கு தமிழர் தாயக பகுதியில் இதுவரை நாட்களிலும் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகள் முன்னிலை வகித்து வந்த நிலையில், இவ்வருடம் எதிர்பாராத மாற்றமாக பெருன்மான்மை இனத்தை பிரதிநிதித்துவ படுத்தும் சிங்கள தேசிய கட்சியான தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகித்து வருகின்றமை தமிழ் தேசிய கட்சிகளுக்கு விழுந்த பேரிடியாகும்.
https://www.youtube.com/embed/zytfLrd2fMQ