தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் அறிக்கையில், இனப் பிரச்சினையை தீர்க்காமல் நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு கிடையாது என தெளிவாக விளக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் உறுப்பினர் அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன் (M. Nilanthan) தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பொதுச் சபைக்குள் உள்ள சில சிவில் சமூகங்கள், தேர்தல் அறிக்கையில் உள்ள 13 ஆவது திருத்தம் தொடர்பில் கடுமையான விமர்சன நோக்கு நிலைகளை கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்றையதினம் (05) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஏனைய சில சிவில் சமூகங்கள் ஐநாவை கையாள்வது தொடர்பில் மென்நோக்கு நிலைகளை கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
இந்த நிலையில், தமிழ் மக்கள் பொதுச் சபையினர், அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு பொது நிலைப்பாட்டு வந்த பின்னரே இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்ததாகவும் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
இதன் படி, தமிழ் பொது வேட்பாளின் தேர்தல் அறிக்கை தொடர்பில் அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன் மேலும் கூறிய விடயங்கள் பின்வரும் காணொளியில்…
https://www.youtube.com/embed/UrO-xDh1OlI