2024ஆம் ஆண்டுக்கான இரண்டாவது மின் கட்டண திருத்தமானது இன்று (15) பொது பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட உள்ளது.
கட்டண திருத்தம் தொடர்பான கணக்கீட்டை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இன்று ஆணைக்குழு கூடி புதிய கட்டண திருத்தத்தை அறிவிக்கவுள்ளது.
மின்சாரக் கட்டணக் குறைப்புக்கான முன்மொழிவு அண்மையில் மின்சார சபையினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அலகுகளுக்கான விலை
இதற்கமைய, 30 புள்ளிகளுக்கு இடைப்பட்ட மின்சார அலகு ஒன்றின் விலை 2 ரூபாவாலும், 30 முதல் 60 புள்ளிகளுக்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் விலை 11 ரூபாவாலும், 60 முதல் 90 புள்ளிகளுக்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் விலை 12 ரூபாவாலும் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி, 90 ரூபா தொடக்கம் 120 ரூபா வரையிலான அலகு ஒன்றின் விலையை 20 ரூபாவினால் குறைக்க மின்சார சபை முன்மொழிந்துள்ளது.