அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலோன் மஸ்க் (Elon Musk) அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் எலோன் மஸ்க் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அரசின் நிர்வாக செலவினங்களை குறைக்க ‘DOGE’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க் அதன் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அமெரிக்க அரசு
ட்ரம்ப் அளித்த இந்த பதவியில் 130 நாட்கள் பணியாற்ற எலோன் மஸ்க் ஒப்புக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அதிரடியாக நிர்வாகத்தில் அவர் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
இதன்மூலம் அமெரிக்க அரசுக்கு ஒருநாள் செலவில் இருந்து இந்திய மதிப்பில் ரூபாய் 34,000 கோடி வரை குறைக்கப்பட்டது.
குறைக்கும் பணி
இந்தநிலையில், தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக எலோன் மஸ்க் (Elon Musk) திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சிறப்பு அரசாங்க ஊழியர் என்ற எனது பணிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.
தேவையற்ற செலவினங்களை குறைக்கும் பணியில் ஈடுபட வாய்ப்பளித்த ட்ரம்பிற்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

